இன்றைய ராசிபலன் 3/12/2019

மேஷம்

மேஷம்: உங்கள் தவறுகளைத்திருத்தி வெற்றிகரமாக செயல் படுவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். மற்றவர்களால் நீங்கள் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரரீதியாக சில முக்கியஸ்தர்களைச் சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் நீங்கள் எடுக்கும் முடிவால் பாராட்டப்படுவீர்கள். புகழ், கவுரவம் கூடும் நாள்.

இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வியாபார வளர்ச்சிக்காக துணிச்சலுடன் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற வாய்ப்புகள் வந்து சேரும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவுடன் பணிகளை திறமையாக செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

ரிஷபம்

ரிஷபம்: உணர்ச்சிப்பூர்வமாகச் செயல்படுவதைதவிர்த்து, அறிவுப்பூர்வமாகச் செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் தள்ளிப்போன விஷயங்கள் உடனடியாக நடக்கும். அலுவலகத்தில் மரியாதை கூடும். சாதிக்கும் நாள்.

இன்று குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கும். மனவருத்தத்துடன் சென்ற
உறவினர்கள் வருத்தம் நீங்கி மீண்டும் வந்து சேருவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

மிதுனம்

மிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அசதி, சோர்வு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் மேலதிகாரி சில சூட்சமங்களை சொல்லித் தருவார். புதிய பாதை தெரியும் நாள்.

இன்று பயணங்கள் செல்ல நேரிடும். எந்த பிரச்சனை வந்தாலும் அதை சமாளிக்கும் திறமை உண்டாகும். அடுத்தவர்களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். விளையாட்டு போட்டிகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

கடகம்

கடகம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால், சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். எந்த விஷயத்திலும் விழிப்புடன் செயல்படுங்கள். குடும்பத்தில் உள்ளவர்களிடம் அனுசரித்துச் செல்லுங்கள். வியாபாரத்தில், லாபம் குறையும். உத்தியோகத்தில் மறதியாய் பிரச்சினை வந்து நீங்கும். முன்கோபத்தைத் தவிர்க்க வேண்டிய நாள்.

காரிய தடை தாமதம் நீங்கும். குடும்பத்தில் இருக்கும் குழப்பம் நீங்கும். விருப்பத்திற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம். பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. அடுத்தவருடன் சில்லறை சண்டைகள் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

சிம்மம்

சிம்மம்: உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புக்கள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. மனைவி வழியில் நல்ல செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.

இன்று வயிறு தொடர்பான நோய் ஏற்படலாம். பணவரத்து இருக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 5

கன்னி

கன்னி: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். யோகம் கிட்டும் நாள்.

இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6

துலாம்

துலாம்: குடும்பத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம், பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கனவு நனவாகும் நாள்.

பணவரத்து இருக்கும். மாணவர்கள் யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் அனுசரித்து செல்வது நல்லது. மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

விருச்சிகம்

விருச்சிகம்: திட்டமிட்டகாரியங்ளைச் சிறப்பாக முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துபோகும். பழைய நண்பர்கள் உதவுவார்கள். யோக, தியானம் என மனம் சொல்லும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

இன்று தடை தாமதம், வீண் அலைச்சல் இருக்கும். கவனமாக செயல்படுவது நல்லது. பணவரத்து எதிர்பார்த்ததை விட கூடுதலாக வரும். பேச்சின் இனிமை சாதூர்யத்தால் எடுத்த காரியத்தை திறம்பட செய்து முடிப்பீர்கள். அக்கம்பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். எதையும் சமாளிக்கும் மனநிலை ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9

தனுசு

தனுசு: தன்னிச்சையாகவும், தைரியமாகவும் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். புதுமை படைக்கும் நாள்.

இன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சிறு தடங்கல்கள் உண்டாகலாம். பார்ட்னர் மூலம் நன்மை உண்டாகும். நிதி உதவி எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைத்து அலுவலக பணிகளை முடிக்க வேண்டி இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3

மகரம்

மகரம்: கடந்த இரண்டு நாட்களாகக் கணவன், மனைவிக்குள் இருந்த போர் நீங்கும். வராது என்று இருந்த பணம் கைக்கு வந்து சேரும். புதியவரின் நட்பு கிடைக்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும் .மகிழ்ச்சியான நாள்.

இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். பிள்ளைகள் உங்களது கருத்துக்களை கேட்டு அதன்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 4, 6

கும்பம்

கும்பம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில நேரங்களில், மனதில் குழப்ப நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் நம்மைப் புரிந்து கொள்ளவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். பழைய பிரச்சினைகளை நினைத்து கோபப்படுவீர்கள். வியாபாரத்தில், வேலையாட்களால் பிரச்சினை உண்டாகும். பொறுமை தேவைப்படும் நாள்.

இன்று சாமர்த்தியமான பேச்சின் மூலமும் சூழ்நிலையை புரிந்து கொண்டு நடப்பதன் மூலமும் காரிய அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றமடைய கூடுதலாக நேரம் எடுத்துக்கொண்டு கவனத்தை சிதற விடாமல் படிப்பது அவசியம்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6

மீனம்

மீனம்: வீண் அலைச்சலும், சிறு சிறு ஏமாற்றங்களும்ஏற்படும். பிள்ளைகளின் பிடிவாதத்தால் பிரச்சினைகள் உருவாகும். வெளிவட்டாரத்தில் பொறுமையுடன் செயல்படுங்கள். அனா வசிய செலவுகளைத் தவிர்க்கப்பாருங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளரிடம் கனிவாகப் பேசுவது நல்லது. உத்தியோகத்தில் பணிகளை முடிக்க போராடவேண்டி இருக்கும். நிதானமுடன் செயல்பட வேண்டிய நாள்.

இன்று புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. காரிய தடை தாமதம் அலைச்சல் இருக்கும். நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் பெறும். பணவரத்து எதிர்பார்த்ததை விட அதிகரிப்பது மனமகிழ்ச்சியை தரும். எதிரிகளால் இருந்து வந்த பிரச்சனை தீரும். நண்பர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *