கடனை வழங்குவதை நிராகரிக்க வேண்டாம்..! தனியார் வங்கிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

இலங்கை கடன் தகவல் அலுவலக அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறையினருக்கு கடனை வழங்குவதை நிராகரிக்க வேண்டாம் என அபிவிருத்தி வங்கி மற்றும் கடன் ஆலோசனை முறை தொடர்பான இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தனியார் வங்கிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடன் அலுவலகம் என்பது நபர்களுக்கு கடனை வழங்குவதற்கோ அல்லது நிராகரிப்பதற்கோ பரிந்துரைக்கும் நிறுவனம் அல்ல என்றும் இந்த நிறுவனம் கணக்கு வழக்குகளை மேற்கொள்வோரின் கடன் நிலைமை குறித்த அறிக்கையை மாத்திரம் வழங்குவதாகும் என்றும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

சில வங்கிகள் தம்மிடம் கடனைப் பெற்றுக்கொள்ள வரும் வாடிக்கையாளர்களை திருப்பி அனுப்புகின்றன. இதற்கான நடைமுறை ஒன்றாக இந்த CRIB Report அல்லது கடன் தகவல் அலுவலகத்தின் அறிக்கையை பயன்படுத்துகின்றனர். கடன் தகவல் அலுவலகம் என்பது ஒருவர் தற்பொழுது பெற்றுக் கொண்ட கடன் மற்றும் அதற்கான தகவல்களை சுயாதீனமாக வெளிப்படுத்தும் நிறுவனமாகும்.

இந்த நிறுவனம் எந்த சந்தர்ப்பத்திலும் எவருக்கும் கடன் வழங்க வேண்டாம் என்று சிபாரிசு செய்வதில்லை. இதேபோன்று தான் இந்த கடன் தகவல் அலுவலகம் எந்த நபர் தொடர்பிலும் உண்மைக்கு புறம்பான ஆவணத்தை மேற்கொள்வதில்லை.

இருப்பினும் சில வங்கிகள் இவ்வாறான அறிக்கைகளை பெற்றுக்கொண்டு வழங்கக்கூடிய கடனைக்கூட நிராகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விசேடமாக வாடிக்ககையாளர்களைப் போன்று சிறிய மற்றும் நடுத்தர அளவிலாக வர்த்தகர்களும் இது தொடர்பாக தெளிவு படுத்தப்பட வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *