உங்களுடைய இன்றைய ராசிபலன் 14/02/2020

மேஷம்

மேஷம்: உங்களுடைய திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் தேடிவரும். சகோதரர்கள் உங்கள் வளர்ச்சிக்கு பக்கபலமாக இருப்பார்கள். திருமண பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். மகிழ்ச்சியான நாள்.

இன்று கலைத்துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆனால் பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். அரசியலில் உள்ளவர்கள் வாகனங்கள் பயன்படுத்தும் போது கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3

ரிஷபம்

ரிஷபம்: எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். உறவினர்கள் நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். வியாபாரத்தில் வேலை யாட்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் சவாலான விஷயங்களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

இன்று சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கை தரம் உயரும். மாணவர்களுக்கு எதிர்காலத்தை பற்றிய எண்ணம் உண்டாகும். மேல் படிப்பு பற்றிய சிந்தனையில் ஈடுபடுவீர்கள். சக மாணவர்களின் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 4, 6

மிதுனம்

மிதுனம்: நீண்டநாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிப்பை அதிகரிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளால் லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். புதுமை படைக்கும் நாள்.

இன்று எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சனை தீரும். எந்த ஒரு காரியத்தையும் முன்னின்று செய்ய ஆசைப்படுவீர்கள். பொருள் சேர்க்கை உண்டாகும். சுப நிகழ்ச்சிகளுக்கு பஞ்சமிருக்கது. விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். இட மாற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6

கடகம்

கடகம்: தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். பணப் பற்றாக்குறை நீடித்தாலும் தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனைகளை முடிப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

இன்று எடுத்த காரியம் தாமதப்படுகிறதே என்ற கவலை உண்டாகும். இரவில் நீண்ட நேரம் கண் விழிக்க வேண்டி வரலாம் கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர்களால் இருந்த மனவருத்தம் நீங்கும். வாழ்க்கை துணையின் உடல் நிலையில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

சிம்மம்

சிம்மம்: எந்த விஷயத்திலும் தைரியமாக செயல்பட்டு முன்னேறுவீர்கள். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரபலங்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரி கள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். வெற்றி கிட்டும் நாள்.

இன்று வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதன் மூலம் செலவு கூடும். விருந்தினர் வருகை இருக்கும். புதிய முடிவுகள் எடுப்பதில் தயக்கம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் உண்டாகலாம். பிள்ளைகள் வழியில் செலவு உண்டாகலாம். பண விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

கன்னி

கன்னி: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பங்கள் விலகும். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். புதிய நண்பர்களால் நன்மை உண்டாகும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். சந்தோஷமான நிகழ்வுகள் நடக்கும் நாள்.

இன்று தொழில் வியாபாரம் எதிர்பார்த்ததை விட அதிகமான லாபம் தரும். ஆனால் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் எப்போதும் பிசியாக காணப்படுவார்கள். செலவுகள் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

துலாம்

துலாம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எந்த விஷயத்திலும் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் அதிகாரிகள் தவறுகளை சுட்டிக்காட்டினால் மாற்றிக்கொள்வது நல்லது. வியாபாரத்தில் மந்தநிலை உருவாகும். பேச்சில் கவனம் தேவை. விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

இன்று கடன் விவகாரங்களில் கொடுக்கல் வாங்கலிலும் எச்சரிக்கை தேவை. பொறுப்புகள் கூடும். பயணங்கள் செல்ல நேரிடலாம். எடுத்த வேலையை செய்து முடிக்க காலதாமதமாகலாம். வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

விருச்சிகம்

விருச்சிகம்: உங்கள் முயற்சிகளில் அலைச்சலும் பிரச்சினைகளும் உருவாகும். மற்றவர்களால் வீண் செலவுகளும், தொந்தரவுகள் அதிகரிக்கும்.முக்கிய கோப்புகளை கையாளும்போது கவனம் தேவை. வியாபாரத்தில் வேலையாட்களிடம் விவாதம் வேண்டாம். உத்தியோகத்தில் மேலதிகாரியிடம் இணக்கமாக செல்வது நல்லது. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

இன்று கலைத்துறையில் இருப்பவர்கள் எட்டிய அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள். அரசியல்வாதிகள், சமூக சேவகர்களுக்கு பலன்கள் நன்மை தீமை என கலந்து கிடைத்தாலும் சிறப்பாக இருக்கும். எந்த ஒரு வேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. செலவு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

தனுசு

தனுசு: எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். நண்பர்களால் ஆதரவு கிடைக்கும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். நீண்ட நாளாக விரும்பிய பொருட் களை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். புகழ் கௌரவம் கூடும் நாள்.

இன்று மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதல் நேரம் பாடங்களை படிப்பது நல்லது. பொறுப்புகள் அதிகரிக்கும். ஆபத்தில் உதவக்கூடிய நண்பர்களை பெறுவீர்கள். பணம் கைக்கு கிடைக்கும். எதிலும் தயக்கமோ, பயமோ இல்லாமல் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

மகரம்

மகரம்: உங்கள் செயல்களில் தீர்க்கமும் வெல்ல வேண்டுமென்ற விடாமுயற்சியும் வெளிப்படும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலர் உங்களுக்கு உதவுவார்கள். வியாபாரத்தில் புதிய சூட்சுமங்களை கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

இன்று அவசர முடிவுகளை எடுப்பதை தவிர்ப்பது நல்லது. விரும்பதகாத ஆசைகள் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது. வீடு, மனை, நிலம், வாகனம் போன்ற சொத்துக்களில் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவை உண்டாகலாம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

கும்பம்

கும்பம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு எளிதாக தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் உயர்வும் உண்டாகும். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். தடைப்பட்ட விஷயங்கள் இனிதே முடியும் நாள்.

இன்று எல்லாவற்றுக்கும் அடுத்தவர் தயவை எதிர்பார்க்க வேண்டி இருக்கலாம். உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை. பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். தர்ம காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

மீனம்

மீனம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் மனதில் கவலைகளும் குழப்பங்கள் அதிகரிக்கும். செயல்களையும் முழுமையாக செய்யாமல் செய்ய முடியாமல் தவிப்பீர்கள். மற்றவர்களை குறை சொல்வதை நிறுத்திக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளுடன் பிரச்சனைகள் வந்து நீங்கும். தடைகளும், தாமதங்களும் ஏற்படும் நாள்.

இன்று தொழில், வியாபாரம் செய்பவர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது. பங்குதாரர்களுக்குள் இருந்து வந்த மனகிலேசங்கள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு தாமதப்படலாம். பணவரத்து அதிகரிக்க செய்யும். மேலிடத்தின் அனுசரனை கிடைக்கும். குடும்பத்தில் இருக்கும் குழப்பங்கள் நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *