பாகிஸ்தானில் 107 பேருடன் பயணிகள் விமானம் விழுந்து நொருங்கியது! திகில் வீடியோ

பாகிஸ்தானில் 99 பயணிகள் மற்றும் 8 விமான ஊழியர்களுடன் பயணித்த விமானம், கராச்சியின் குடியிருப்பு பகுதியில், கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவத்தில் அனைவரும் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

https://www.youtube.com/watch?v=ZUTXrspjtp0&t=1s

பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (PIA) நிறுவனத்துக்கு சொந்தமான விமானம், லாகூர் நகரில் இருந்து வர்த்தக தலைநகரான கராட்சிக்கு இயக்கப்பட்டது. இதில் 99 பயணிகள் மற்றும் 8 விமான ஊழியர்கள் இருந்தனர். ஆகமொத்தம் விமானத்தில் மொத்தம் 107 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது.

கராச்சியில் விமானம் தரையிறங்க முயன்றபோது, குடியிருப்பு காலனிப்பகுதிக்குள் நொறுங்கி விழுந்துள்ளது.

https://twitter.com/khurram143/status/1263773838338334720

இதையடுத்து சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து உள்ளனர்.

இந்த சம்பவத்தில், விமானத்தில் பயணித்த அத்தனை பேரும் உயிரிழந்திருக்க கூடும் என்று கருதப்படுகிறது.

https://twitter.com/WPCION/status/1263775317610631173?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1263775317610631173%7Ctwgr%5E&ref_url=https%3A%2F%2Fwww.tamilwin.com%2Fasia%2F01%2F246700

குடியிருப்பில் விழுந்ததால் அங்கிருந்த மக்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *