ஆசாரியமூட்டும் கருப்பு உப்பின் பயன்கள்! தினமும் ஒரு ஸ்பூன் இதை சாப்பிடுங்க!

உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்று ஒரு பழமொழி உண்டு என்பது நினைவிருக்கிறதா? உப்பு என்பது ருசிக்காக மட்டும் உட்கொள்ளப்படுவது அல்ல அது, உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் உறுதுணையாக இருக்கிறது.ஒரு நபருக்கு, ஒரு நாளைக்கு, பத்து கிராம் உப்பு மட்டுமே போதுமானது என்று மருத்துவக் குறிப்புகள் கூறுகின்றன. ஆனால், நாம் உணவில், ஊறுகாய், சிப்ஸ், பதப்படுத்தப்பட்ட உணவுகளை வஞ்சனை இல்லாமல் சேர்த்துக் கொள்கிறோம். பலன், ரத்தக் கொதிப்பு போன்றவை நம்மை அணுகி விடுகின்றன.

இனிப்பு, காரம் போன்றவற்றிக்காக பதில் உணவில் சேர்க்க வேறு உண்டு. ஆனால், உப்பிற்கு பதிலாக வேறு எதையாவது உபயோகிக்க முடியுமா? உவர்ப்பு என்னும் சுவை உப்பின் மூலம் மட்டுமே கிடைக்கும். பொதுவாக கடல் நீரிலிருந்துதான் உப்பு பெறப்படுகிறது. ஆனால், பாறைகள் மூலமும் உப்பு பெறப்படுகிறது என்றால் ஆச்சர்யமாக இல்லை?

இமய மலைப் பகுதிகளிலிருந்தும், நேபாளப் பகுதியிலிருந்தும் ஒரு வகை உப்பு எடுக்கப்படுகிறது. ஆம். இவ்வகை உப்பிற்கு கருப்பு உப்பு [Black Salt] என்று பெயர். இதில் இருப்பதும் சோடியம் குளோரைடு தான். கருப்பு உப்பில், கடல் உப்பைவிட சோடியம் குறைவாகக் காணப்படுகிறது. வட இந்தியாவில் ‘காலா நமக்’ என்று பெயர் கொண்ட கருப்பு உப்பையே அதிகம் உணவில் சேர்த்துக் கொள்கிறார்கள். இந்த வகை, சோடியம் குறைவான கருப்பு உப்பு, நமக்கு என்ன நன்மைகளைத் தருகிறது தெரியுமா ?

  • மூட்டு வலி, தசை பிடிப்பிற்கு, கருப்பு உப்பை வெறும் வாணலியில் நன்றாக வறுக்கவும். அதை, ஒரு கெட்டியான துணியில் மூட்டையாகக் கட்டிக் கொள்ளவும். வலி இருக்கும் இடங்களில் உப்பு ஒத்தடம் கொடுத்தால், நல்ல பலன் கிடைக்கும்.
  • சாப்பிட்ட பின், வயிறு உப்புசம், போன்ற பிரச்னைகள் இருந்தால், சமையலில் கடல் உப்பிற்குப் பதிலாக கருப்பு உப்பைச் சேர்த்துக் கொள்ளவும். மருந்துக்கு கடைகளில் விற்கும் ஜீரண மாத்திரைகளில், கருப்பு உப்பு தான் சேர்க்கப்படுகிறது.
  • ஆஸ்துமா, அலர்ஜி, சைனஸ் தொந்திரவு, ஏன் சாதாரண ஜலதோஷத்திற்குக் கூட, மூச்சு விடுவதில் சிரமம் இருக்கும். அந்த நேரங்களில், இன்ஹேலரில், கருப்பு உப்பினை பொடித்துப் போட்டு சுவாசித்தால், மூச்சுத்திணறல் இருக்காது.
  • உடல் எடையைக் குறைக்க, உணவில் கருப்பு உப்பு மட்டுமே சேர்த்து சமைப்பது உசிதமானது. ஏனென்றால், உடல் எடை குறைவதை கண் கூடாகப் பார்க்கலாம்.
  • கெட்ட கொழுப்புத் தன்மையை மட்டுப்படுத்துகிறது. கருப்பு உப்பினை உணவில் சேர்த்துக் கொள்வதால், கொலாஸ்ட்ரல் அளவு அடிக்கடி வேறுபடாமல், ஆரோக்கியமான ஒரே நிலையில் பாதுகாக்கப் படுகிறது. சீரான ரத்த ஓட்டம் உடலுக்குக் கிடைக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *